அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம்

அறம் செய விரும்பு

இலாப நோக்கற்ற, தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நடத்தும், அமெரிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத் தொண்டு நிறுவனம். 

American Charitable Tamil Society

Have desire to do good deeds

A registered 501c3 non-profit public charity organization run by volunteers.


I Am Charitable Tamil

FacebookYouTubeLinkEmailLinkedInInstagramTwitterLink

RECENT UPDATES

இறை மொழியாம் அன்னைத் தமிழில் திருக்கார்த்திகை திருவிளக்கு வழிபாடு 

நாள்: டிசம்பர் 13, 2024 | நேரம்: மாலை 6 கிழக்கு நேரம்

இடம்: Knights of Columbus, 301 New Britain Ave, Unionville, CT 06085

திருவிளக்கு வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள்:

1) குத்துவிளக்கு - 1

2) அகல் விளக்கு - 2,  திரி

3) நல்லெண்ணெய்

4) கற்பூரம், ஊதுபத்தி

5) பச்சரிசி - 100 கிராம்

6) திருநீறு, சந்தனம், குங்குமம், மஞ்சள்

7) தொடர் பூ - 1 முழம்

8) உதிரிப்பூ கொஞ்சம்

9) தேங்காய்

10) வெற்றிலை பாக்கு

11) வாழைப்பழம்

12) அமுது 

13) வாழை இலை - 1

14) பூசைத்தட்டம்

15) தீப்பெட்டி

ஓடி விளையாடு (Odi Vilayaadu)

Tamil Traditional Games for NextGen Kids (Ages 1 - 13)

June 2, 10 am to 4 pm @ Mixville Park, 1300 Notch Rd, Cheshire, CT 06410

June 30, 10 am to 4 pm @ Fowler Park, 4110 Carolene Way, Cumming, GA 30040

தமிழீழத்தில் தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவி!

தமிழீழத்தில் உள்ள மிகவும் பிந்தங்கிய கிராமப்புறப் பாடசாலையில் (கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 101 மாணவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.


தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் வறிய மாணவர்களைத் தத்தெடுத்தல்!

தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அம்மாணவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்கள் மீண்டும் பள்ளிப் படிப்பினைத் தொடர ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 300 மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வியைப் பரப்புவதற்கான உன்னதமான காரணத்திற்காக உங்கள் தாராளமான பங்களிப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

2023 - வறிய மாணவர்களை தத்தெடுத்தல் வலைஒளி பக்கத்தின் மூலம் இந்த விநியோகத்தின் போது நடந்த அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளுங்கள். 


தமிழ்நாட்டுக் கிராமங்களில் தேவைப்படும் மாணவர்களிடையே கல்வியை அறிவூட்டுவதற்கு உங்களுடன் இணைந்து எங்களுடன் கைகோர்த்த திண்ணை அறக்கட்டளைக்கும் மிக்க நன்றி. 


More info and gallery >>


தமிழீழத்தில் தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவி!

தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மூன்று கிராமப்புறப் பாடசாலைகளில் (வீரச்சோலை அ.த.க பாடசாலை, ஹோலி குறோஸ் ம.வி, நாமகள் வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 88 மாணவர்களுக்கும்  கற்றல் உபகரணங்கள், பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான பயிர்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

More info and gallery >>